கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்; தனித்து போட்டியிட ஓபிஎஸ் தரப்பு தீர்மானம்.!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட, ஓபிஎஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட, ஓபிஎஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

கர்நாடக தேர்தல்:

அடுத்த மாதம் மே 10இல் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் 3 கர்நாடக தொகுதிகளில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தேர்தல் முடிவுகள் மே 13இல் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை ஆளும் பாஜக, காங்கிரஸ், மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக போட்டி:

தமிழ்நாட்டிலிருந்து அதிமுக கர்நாடக தேர்தலில் எப்போதும் கவனம் செலுத்துவது வழக்கம். கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் பேர் வாழ்வதால், அங்கு நடைபெறும் தேர்தலில் அதிமுக பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை தேர்தலிலும், களமிறங்க தயாராகி வருகிறது.

தீர்மானம்:

ஏற்கனவே அதிமுக சில தொகுதிகளில் அங்கு தனித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில், கோலார் தங்கவயல், காந்திநகர் மற்றும் பங்காரூபேட் ஆகிய 3 தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பில் தனித்து போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார்.