#KarnatakaElectionResults : கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி.!

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Basavaraj Bommai BJP

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் மின்னணு வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே போல ஒரு சில தொகுதிகளில் வெற்றிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. அதில், தற்போது முதல்வர் தொகுதி வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த முதல்வர் பசவராஜ் பொம்மை , ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த பசவராஜ் பொம்மை தற்போது வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக பதான் யாஷிராமெத்கான் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.