கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி..!

கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி.

கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

unknown node