தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி...!

இன்று, மாரியப்பன் அவர்களுக்கு அரசு வேலை வழங்கி அனைவரையும் பெருமைப் படுத்திய தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு எனது நன்றி. (2/2)

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கியதற்கு, ம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கியதற்கு, ம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பல இடர்பாடுகளைத் தகர்த்து, பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வென்ற சாதனைத் தமிழர் மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வளர்ச்சியைக் கண்டு பலநாள் மகிழ்ந்திருக்கிறேன்.

இன்று, மாரியப்பன் அவர்களுக்கு அரசு வேலை வழங்கி அனைவரையும் பெருமைப் படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு எனது நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node