ரஜினியை சந்திக்க உள்ள கமல் ? ஆதரவு கேட்க வாய்ப்பு

It has been reported that Kamal Haasan will meet actor Rajinikanth in person this evening and inquire about his health.

இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை  கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்த நிலையில்,கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அண்மையில் அறிவித்தார்.ரஜினியின் இந்த முடிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ரஜினியின் திரையுலக நண்பராக அறியப்படும் ,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.மயிலாடுதுறையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கமல் பேசுகையில்,என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கூறினார்.மேலும் ரஜினி அரசியல் நிலைப்பாடு குறித்து கூறுகையில்,ரஜினி ரசிகர்கள் நிலைதான் எனக்கும்,ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.பிரசார பயணம் முடிந்து ரஜினியை சந்திப்பேன், சந்தித்த பின் உங்களுக்கு நான் சேதி சொல்கிறேன் என்று கூறினார்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கமல் பேசுகையில், அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது என் நண்பரான ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் என்று பேசினார்.

இந்நிலையில் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்தை  கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரஜினியிடம் ஆதரவு கேட்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.