ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும்! – கமல்ஹாசன் கோரிக்கை!

திரைத்துறையில் உலகநாயகனாக வலம் வந்து கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை நிறுவி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் பிரமாண்ட இயக்குனர்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி எனும் அரசியல் கட்சியை நிறுவி தீவிர அரசியலிலும், திரைத்துறையிலும் செயல்பட்டு வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில்  பேசுகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும். என கேட்டுக்கொண்டார்.

திரைத்துறையில் உலகநாயகனாக வலம் வந்து கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை நிறுவி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் பதிலளிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி குறிப்பிட்டார். அவர் பேசியதாவது, ‘ ரஜினிகாந்த் தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம், தமிழகம் அவருக்கு நிறைய நல்ல பலன் செய்துள்ளது. அவர் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.’ என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி தமிழக அரசியலில் ஈடுபட உள்ளதாக ரஜினியே அறிவித்துள்ளார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தனி கட்சி தொடங்கி போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

unknown node