நாளை செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்..!

Kamal Haasan, chairman of the Makkal Needhi Maiam will meet reporters tomorrow.

நாளை செய்தியாளர்களை  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கவுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை காலை 11 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்க உள்ளதாகவும், பத்திரிக்கையாளர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.