“சீரமைப்போம் தமிழகத்தை” – இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன் !

With the assembly elections looming, Makkal Needhi Maiam leader Kamal Haasan is set to begin his election campaign today.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. அதிமுக – திமுக  இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே , ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமலஹாசன் அவர்கள் துவங்க உள்ளார்.