ஒன்று கூடுவோம்.. வென்று காட்டுவோம்.. இடைத்தேர்தல் பரப்புரைக்கு தயாரான கமல்ஹாசன்.!

நாளை முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்

நாளை முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களமானது தேர்தல் நாள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே செல்கிறது. திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களும் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அவர்களும் போட்டியிடுகின்றனர்.

கமல்ஹாசன் ஆதரவு :இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு  அளிப்பதாக மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்து விட்டார். மேலும் அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வேன் எனவும் அறிவித்து அதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

பரப்புரை :இந்நிலையில், நாளை முதல் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். அந்த டிவிட்டர் பக்கத்தில்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்என பதிவிட்டு உள்ளார் கமல்ஹாசன்.

கூடுதல் பலம் :ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் பலர் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக கூட்டணி கட்சியினரும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது கமல்ஹாசனும் இந்த கூட்டணியில் இணைந்து இருப்பது வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

unknown node
ஒன்று கூடுவோம்.. வென்று காட்டுவோம்.. இடைத்தேர்தல் பரப்புரைக்கு தயாரான கமல்ஹாசன்.!