ஜெயலலிதா நினைவிடம் திறப்பு -மெரினாவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

Jayalalithaa memorial inaugurated - AIADMK volunteers gathered at the marina

சென்னை மெரினாவில் திறப்பு விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் அதிமுக தொண்டர்கள்  குவிந்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் இன்று பழனிசாமி திறந்து வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட உள்ளது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடியில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.தற்போதுஜெயலலிதாநினைவிடம்திறக்கப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளது.நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில் ,திறப்பு விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர்.