ஜெயலலிதா 5-ஆம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை!

Today, on the 5th anniversary of the death of the late Chief Minister Jayalalithaa, DTV Dinakaran pays homage with a flower ring at the memorial.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அப்பொழுது அம்மா காட்டிய பாதையில் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்கிறோம் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தலைமையில் அங்கிருந்து அமமுக கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்.