நம்மை யார் என நமக்கு அறிமுகப்படுத்தியது கிருஸ்தவர்கள் தான். – அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கிருஸ்தவ மதம் பற்றயும், தமிழர்களின் வரலாறு பற்றியும் பல்வேறு விஷயங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.
ஏசுநாதருக்கு ஆதரவு :
அவர் கூறுகையில், இந்த கல்லூரி முதல்வர் கூறுகையில், கல்லூரி ஆரம்பிக்கும் போது குறைவான மாணவர்களே சேர்த்ததாக அவர் கூறினாராம். அதற்கு அமைச்சர், ஏசுநாதருக்கு ஆதரவாக முதலில் கொஞ்சம் நபர்களே இருந்தார்கள்.தற்போது அவர் பின்னால் உலகமே இருக்கிறது அல்லவாஎ? என குறிப்பிட்டு பேசினார்.
தமிழ் காப்பியங்கள் :
அடுத்ததாக, தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியம், புறநானூறு ஆகிய தமிழ் நூல்கள் பற்றி பேசினார். அடுத்ததாக, நாம் யார், நம் இனம் எப்படிப்பட்டது, எப்படிபட்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியது கிருஸ்துவ மதம் தான் என குறிப்பிட்டார்.
தாய் மொழி தமிழ் :
கிருஸ்தவ மதத்தை பரப்ப தான் கால்டுவவெல் இந்தியாவுக்கு வந்தார். ஆனால், இங்கு வந்து, தமிழ் மொழி பற்றி ஆராய்ந்து, தமிழில் இருந்து பிறந்தது தான், தெலுங்கு, கன்னடம், அதற்கு பிறகு மலையாளம், கடைசி பிள்ளையாக துலு ஆகியவை என விளக்கியவர் கால்டுவெல். என குறிப்பிட்டார். அடுத்து, ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டான் அது வேறு,ஆனால், கிருஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் தான் திராவிடன் எனும் சொல்லை கண்டறிந்தார்கள். ஹரப்பா, மொஹஞ்சதாரோ கலாச்சாரம் திராவிடன் கலாச்சாரம் என ஆராய்ந்தவர்கள் கிருஸ்தவர்கள் எனவும்,
நாம் யார்.? :
நம்மை யார் என நமக்கு அறிமுகப்படுத்தியது கிருஸ்தவர்கள் தான் எனவும், அப்படி அவர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தவில்லை என்றால் நமது வரலாறை நாம் மறந்து போயிருப்போம் எனவும் அமைச்சர் துரைமுருகன் அந்த விழாவில் பேசினார்.