முதல்வர் வேட்பாளர் குறித்து சி.டி.ரவி கூறியது சரியா ? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம்

Tamil Nadu BJP leader L Murugan has said that CD Ravi's statement that he is the chief ministerial candidate of the AIADMK is Palanisamy.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரியான கருத்துதான் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.ஆனால் அதிமுக ஏற்கனவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த நிலையில், இவ்வாறு கூறிவந்தது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே  தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறினார்.

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரியான கருத்துதான். திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று  எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.