இந்தியாவில் இதுவரை இல்லாத கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் உயிரிழப்பு ,94,052 பேர் பாதிப்பு

In the last 24 hours, 6,148 people have been killed and 94,052 injured in India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 6,148 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,91,83,121 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,91,83,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில்  கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 6,148 ஆக பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,59,676 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,51,367 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,76,55,493 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,67,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 23,90,58,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.