வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும் – மு.க.ஸ்டாலின்

வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.

வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.

விடுதலை போராட்ட வீரரான ஒண்டி வீரன், புலித்தேவர் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். இவர், அருந்ததியர் பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். இந்நிலையில், இன்று அவரது 250-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 250-ஆவது நினைவுநாள்! வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

unknown node