#Breaking:புதுச்சேரியில் பாஜக செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்...!

In Pondicherry, the BJP selvaganapathy was elected unopposed as a member of the state assembly.

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினராக பாஜக செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுச்சேரி மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் செல்வகணபதி முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து,கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.மேலும்,பிற அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில்,புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.