நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி NDPP-யானது 27 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பாஜக 12 இடங்களும் முன்னிலை பெற்றுள்ளன.
கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நாகலாந்து பொது தேர்தலில் பாஜக, தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (NDPP) பாஜகவுடன் 40-20 தொகுதிகளில் களம் கண்டன. அதே போல காங்கிரஸ் கட்சி – நாகாலாந்து மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து 23 -22 தொகுதிகளில் களம் கண்டுள்ளன.
இதில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு வெற்றி பெற்றதால், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவுகள் இன்று எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
அதில், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி NDPP-யானது 27 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பாஜக 12 இடங்களும் சேர்த்து இந்த கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நாகலாந்து மக்கள் கட்சி NPF 3 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லை என தகவல் வெளியாகி வருகிறது. மற்ற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலையில் உள்ளன.