மேகாலயா தேர்தல் முடிவுகள்.! பாஜக இரண்டாம் இடம்.! ஆட்சியை கைப்பற்றுவது யார்.?

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி NPPயானது 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 10 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி NPPயானது 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 10 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல , திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும், மேற்கு வங்கம், லட்சத்தீவுகள், அருணாச்சல பிரதேசம் ,ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளது.

மேகாலயா தேர்தல் :அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மேகாலயா சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

பாஜக இரண்டாம் இடம் :இதில், தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி NPPயானது 25 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதே போல , 10 இடங்களில் முன்னிலை பெற்று பாஜக 2ஆம் இடத்தில உள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. மற்ற பிற கட்சிகள் 15 இடங்களை கைப்பற்றியுள்ளதால், யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று இழுபறியில் முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.