தலைநிமிர்ந்து வருகிறேன்...! வாழ்த்துக்கள் ஸ்டாலின் என சொல்வீர்களா தலைவரே...!

Chief Minister MK Stalin has posted a video on his Twitter page congratulating his father on his birthday.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் கவிதை நடையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

unknown node