என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்!நான் பேசியது உண்மைதான்-தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.  அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன்.  டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் ஆடியோ ஆனது வெளியானது.வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் கோழைத்தனமாகவும். ஆணவத்தோடும் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அழிந்து போவார் என்றும் கோபத்துடன்  கூறினார் .மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தேனியில் போட்டியிட வைத்தது திட்டமிட்ட சதி என்று கூறினார்.

unknown node

இதனால் இருவருக்குமான மோதல் வெளியில் வந்தது. இந்த நிலையில் டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும்  என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசியுள்ளார்.