டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்.! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி.! 

வாய்ப்பு இருந்தால் டி.டி.வி.தினகரன் உடன் இணைந்து செயல்படுவேன். - ஓ.பன்னீர்செல்வம்.

வாய்ப்பு இருந்தால் டி.டி.வி.தினகரன் உடன் இணைந்து செயல்படுவேன். – ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக பொதுக்குழு வழக்கு முடிந்து, அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்த பிறகு இனி மக்களை நீதிமன்றத்தை நாடுவேன் என சற்று ஒதுங்கி இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அடுத்ததாக அவரது தயார் சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

ஓபிஎஸ் பேட்டி :

இந்நிலையில், நேற்று மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிசாமி பற்றி பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார்.

டி.டி.வி.தினகரன் :

அவரிடம், டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்படுவீர்களா? என கேட்ட போது, வாய்ப்பு இருந்தால் டி.டி.வி.தினகரன் உடன் இணைந்து செயல்படுவேன் என கூறினார். அடுத்ததாக சசிகலா பற்றி பேசுகையில், விரைவில் அவரை சந்திக்க உள்ளேன் என குறிப்பிட்டார்.

இபிஎஸ் :

மேலும் அதிமுகவில் வழங்கப்பட்டு வரும் புதிய உறுப்பினர் அட்டை பற்றி கேட்கையில், அவர் (எடப்பாடி பழனிசாமி) சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.