திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக ஒன்று பட வேண்டும். – சசிகலா.
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அதிமுக தலைவர்கள் பலர் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் சசிகலா தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் அங்கு எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்துவிட்டு பேசிய சசிகலா பல்வேறு அரசியல் விஷயங்களை குறிப்பிட்டார்.
திமுக – தமிழக ஆளுநர் பிரச்சனை பற்றி பேசுகையில், ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால் தமிழக மக்களுக்கு எப்படி நல்லது செய்வது. என கேட்டறிந்தார். மேலும், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக ஒன்று பட வேண்டும். எனவும் சசிகலா பேசினார்