கிருஷ்ணகிரி வெடிவிபத்து.. சிபிஐ விசாரணை வேண்டும்.! உள்துறை அமைச்சருக்கு அதிமுக கடிதம்.!

கிருஷ்ணகிரி, பழைய பேட்டை பகுதியில் கடந்த 29ஆம் தேதி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ , அவரது மகன்,

Union minister Amit shah

கிருஷ்ணகிரி, பழைய பேட்டை பகுதியில் கடந்த 29ஆம் தேதி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ , அவரது மகன், மகள், அருகில்  இருந்த ஹோட்டல் உரிமையாளர் , ஊழியர்கள் என 3 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த வெடி விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் , காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நேற்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் சிலிண்டரினால் விபத்து ஏற்படவில்லை. அருகில் உள்ள உணவகத்திற்கு எந்த எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விநியோகிக்கவில்லை. குடியிருப்பு பகுதியில் பாட்டசு கடை இருந்ததே வெடி விபத்துக்குக் காரணம் என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி வெடி விபத்து தொடர்பாக சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு அமைப்பான NIA விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பட்டாசு கடை குடோனில் சிலிண்டர் வெடித்ததால் வெடி விபத்து ஏற்பட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த குடோன் மக்கள் அதிகம் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது. மாணவர்கள் படிக்கும் பள்ளி இருக்கிறது. இந்த வெடி விபத்தால் 9 உயிர்கள் பறித்த அந்த குடோனில் மிகவும் ஆபத்தான வெடிபொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாநில அரசு தவறான தகவல்களை அளித்து வருகிறது. இந்த பிரச்சினைகளை கையாள்வதில் மாநில அரசின் கவனக்குறைவாக உள்ளது. மத்திய அரசு, என்ஐஏ அல்லது சிபிஐ மூலம் முழுமையான விசாரணை நடத்திட பரிந்துரைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். என மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிருஷ்ணகிரி வெடிவிபத்து.. சிபிஐ விசாரணை வேண்டும்.! உள்துறை அமைச்சருக்கு அதிமுக கடிதம்.!