இனி தேர்தல் அரசியலில் நான் போட்டியிடப்போவதில்லை. பாஜக தொண்டனாக பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட உள்ளேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முக்கிய தலைவர் எச்.ராஜா கூறுகையில், இனி தேர்தல் அரசியலில் நான் போட்டியிடப்போவதில்லை என்றும், இனி பாஜக தொண்டனாக தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபட உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துளளார்.
மேலும், சிவகங்கை தொகுதி எம்பி யார் என்று எனக்கு தெரியவில்லை. மக்களே மறந்து விட்டனர் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பற்றி விமர்சித்தார். மேலும், திமுக கட்சியை மக்கள் மறந்துவிட்டனர் அதனால் தான் சமூக நீதி மாநாடு எல்லாம் நடத்துகிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வென்று விட கூடாது எனவும் எச்.ராஜா கூறினார்.