சட்ட நீதி.. சமூக நீதி..! நீதித்துறையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கைகள்.!

சட்ட நீதியும், சமூக நீதியும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என நீதித்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

சட்ட நீதியும், சமூக நீதியும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என நீதித்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

இன்று மதுரையில் புதிய நீதிமன்ற கட்டட திறப்பு விழா மற்றும் 166 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மதுரை மற்றும் மயிலாடுதுறையில் புதிய நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், சென்னை தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

unknown node

முதல்வர் உரை :

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு பல்வேறு கோரிக்கைகளையும், தமிழக அரசு நீதித்துறைக்கு செய்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் உரையாற்றியுள்ளார்.

unknown node

நீதித்துறை உட்கட்டமைப்பு :

அவர் பேசுகையில், நீதித்துறையானது விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 44 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஆணை வெளியிடப்பட்டது. என்று கூறியுள்ள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் :

மேலும், வழக்கறிஞர் நல நிதிக்கு 8 கோடி ரூபாய் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டு தனது கோரிக்கைகளை முன் வைத்தார். அதில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும். என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் தமிழ் மொழியையும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் கிளைகளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்தார்.

unknown node

சமூக நீதி – சட்ட நீதி :

அடுத்ததாகா, சட்டத்துறை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் இயங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு சாமானியனின் நம்பிக்கையும் நீதித்துறை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார். இறுதியாக, சட்ட நீதியும், சமூக நீதியும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என நீதித்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையை முடித்துக்கொண்டார்.