அனைவருக்கும் 73-வது இந்தியக் குடியரசு தின வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி

அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அனைவருக்கும் 73வது இந்தியக் குடியரசு தின வாழ்த்துகள். இலட்சக்கணக்கான மக்களின் தியாகத்தால்

குடியரசு தினத்தை முன்னிட்டு கனிமொழி எம். பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் 73வது இந்தியக் குடியரசு தின வாழ்த்துகள். இலட்சக்கணக்கான மக்களின் தியாகத்தால் உருவான இந்த நாட்டை பாதுகாத்து, மக்களின் உரிமைகளையும் பன்முகத்தன்மையையும் என்றும் போற்றிடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.