குஜராத் உள்ளாட்சி தேர்தல் : குடும்பத்தினருடன் வாக்களித்த அமித் ஷா

Gujarat local body polls: Union Home Minister Amit Shah along with his family members casts his vote at Naranpura

குஜராத் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் குடும்பத்தினருடன் வாக்களித்தார் அமித் ஷா.

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதாவது இன்று முதற்கட்ட தேர்தலும் ,பிப்ரவரி 28-ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ,காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நாரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் .