அனைத்து குளறுபடிகளையும் களைந்து சரி செய்து வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் குரூப்-2 தேர்வை மீண்டும் நடத்தவேண்டும்.- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்று குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் தேர்வு தொடங்கும் முன்னர் ஒரு சில மையங்களில் தேர்வர்களின் பதிவெண்களில் சில குளறுபடிகள் ஏற்பட்டு இருந்து, பின்னர் அவை சரி செய்யப்பட்டு சில இடங்களில் தாமதமாக தேர்வுகள் தொடங்கப்பட்டன.
குளறுபடிகள் :இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று நடைபெற்று வரும் குரூப் 2 முதன்மை தேர்வில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு, தாமதமாக தொடங்கியுள்ளது. பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. இதற்கு டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே முக்கிய காரணம். என குறிப்பிட்ட அவர்,
மீண்டும் தேர்வு :அனைவரும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் , தேர்வர்களுக்கு மனஉளைச்சல், பதட்டமில்லா சூழல் உருவாக்கி தரவேண்டும் எனவும், ஆதலால், வேறு இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்து சரி செய்து வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை மீண்டும் நடத்தவேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
unknown node