மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாமல் அரசு கட்டிடங்கள் கட்டக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்!

Are government buildings in Tamil Nadu accessible to the disabled? As questioned by the Chennai High Court.

தமிழகத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி அரசு கட்டிடங்கள் கட்ட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுதும் உள்ள அரசு கட்டிடங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.