இறைவனால் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது – முதல்வர் பழனிசாமி பேச்சு

CM Palanisamy has said that he never thought of becoming the Chief Minister as he had started the Assembly election campaign from Edappadi.

எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,நான் முதல்வராவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. சேலம் மாவட்டம் எடப்பாடியில் பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவியில் வழிபாடு செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.அப்பொழுது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்த இயக்கம் அதிமுக.43 ஆண்டுகளாக திமுக வெற்றி பெறாத ஒரே தொகுதி எடப்பாடி.எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு  கோட்டை.நான் முதல்வராவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை.இறைவனால் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது. பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது .மக்களின் ஆதரவோடு அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பேசியுள்ளார்.

இறைவனால் எனக்கு முதல்வர் பதவி கிடைத்தது – முதல்வர் பழனிசாமி பேச்சு