பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று குறிப்பிடப்படவில்லை. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம். ஓபிஎஸ் வழக்கறிஞர் கருத்து.
இன்றைய தமிழக அரசியலில் தலைப்பு செய்தியாக அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு மாறிப்போயுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பு செயல்படும் எனவும் , அதன் படி இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என உறுதியாகியுள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்றே எடப்பாடி பழனிசாமி தரப்பும் அதே போல எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்கள் குறித்து ஓபிஎஸ் அணியின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றே தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என கூறியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுகள் சிவில் வழக்கை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.