இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற முன்னாள் அதிபர் சிறிசேனாவின் சுதந்திர கட்சி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக்கட்சி அரசில் இணையமாட்டோம்
இந்த நிலையில், இலங்கை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்துக்கட்சி அரசில் இணையமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி
இதனை தொடர்ந்து, இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற முன்னாள் அதிபர் சிறிசேனாவின் சுதந்திர கட்சி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.