எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவரும் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
unknown node