முதல் முறையாக சுதந்திர தின விழா பாதுகாப்புக்கு டி.ஆர்.டி.ஓ இன்று செங்கோட்டையில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுத்தியது. நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7 -வது முறையாக கொடியேற்றினார். செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா […]
74-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி பாளையங்கோட்டையில் ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த நிலையிலும், நாட்டிற்காக கடமையை ஆற்றியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று 74-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதற்கு முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார். இந்த நிலையில் […]
தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் முருகன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் முருகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் 74 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். பாரதப் பிரதமர் தலைமையில் புதிய […]
எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவரும் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை […]
74-ஆவது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதைத்தொடந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து நல் ஆளுமைக்கான விருதை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
74-ஆவது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியற்றினார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதைத்தொடந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.
74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4-வதுமுறையாக கொடியேற்றினார். தேசிய கொடியேற்றி பின்னர் முதல்வர் உரையாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் […]
இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 74-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசியக் கொடியேற்றினார்.
புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாளை மழையில் 74 வது சுதந்திர தின கொண்டாட்டப்படவுள்ளது. இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட உள்ளது. தேசிய தலைநகரில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார். இதற்கிடையில், நாளை காலை இங்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் அச்சு றுத்தல் மத்தியில் நாளை அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது […]
நாளை கொண்டாணப்படும் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட சிசிடிவி கேமரா மூலம் வாகன தணிக்கை, ரோந்து பணிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளை 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் யாரும் […]
நாளை மறுநாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கின்ற சூழ்நிலையில், ஏற்கனவே கொரானா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்த நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கொண்டாட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், சுற்றுலாக்கள் என அனைத்திற்குமே தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சுதந்திர தின விழா அரசு உத்தரவிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ளது. வருகிற 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை டெல்லி […]
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது. டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சரியான சமூக இடைவெளி கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் .அனைவரும் முகக் கவசம் […]