#Breaking:முதல்வர் ஸ்டாலினுடன் பா.சிதம்பரம் சந்திப்பு..!

Former Union Finance Minister P. Chidambaram has met Chief Minister Stalin at the Chennai General Secretariat.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் சந்தித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் இன்று சந்தித்துள்ளார்.

மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை பா.சிதம்பரம் அவர்கள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக,பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.மேலும்,அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.