சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது. மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பல விஷயங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவர்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல என திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் விமர்சித்துப் பேசியிருந்தார். Read More- “அவங்க பாசிசம்னா., நீங்க பாயாசமா.?” திமுகவை […]
விக்கிரவாண்டி: வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதைப்போல, நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் (B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என கட்சியின் தலைமை […]
Election2024: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று பா.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயார் செய்த 5 தலைப்புகளின் கீழ் 25 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் உள்ளிட்ட […]
Congress : வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக 5 வாக்குறுதிகளை அக்கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக அறிவித்து இருந்தார். அதனை இன்று தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார் . அவர் கூறுகையில், மத்திய அரசு மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. உ.பியில் அண்மையில் நடைபெற்ற காவல்துறை தேர்வில் 48 லட்சம் பேர் எழுதினார்கள். அடுத்த […]
தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அரசுக்கு எதிராக செயல்படுவதும் இருந்து வருகிறது. சமீபத்தில், பலக்லைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு மோதல் ஏற்பட்டது. சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி வைத்தது. அப்போது, துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் […]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், […]
விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றங்களில் வாதிட தேவை இருக்காது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருப்பதால், அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் தான் வெற்றி […]
அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதை எப்படி மத்திய அரசு பெற போகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அரசிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் மாநிலங்களவையில் பேசுகையில், அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த கூடுதல் நிதியை […]
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த ப.சிதம்பரம் மற்றும் சசிதரூர் கருத்துக்கு , பாஜக செய்தி தொடர்பாளர் , ‘ சில காரணங்களுக்காக டாக்டர் மன்மோகன் சிங்கை பாரத பிரதமராக ப.சிதம்பரமும், சசி தரூரும் உண்மையாகவே ஒருபோதும் கருத்தமாட்டார்கள்.’ என விமர்சித்துள்ளார். இங்கிலாந்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய தலைவர்கள் பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படஏராளமானோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல, காங்கிரஸ் […]
இந்து மகாசபை, பாரதிய ஜனசங்கம், பாஜக உள்ளிட்ட யாருமே அரசியல் சாசன வடிவமைப்பு குழுவில் உறுப்பினர் கிடையாது. பாஜகவிற்கு, நாடாளுமன்ற மாநிலங்களவை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு எனும் பெருபான்மை இல்லை. இந்த தடை மட்டும் இல்லையென்றால் அரசியல் சாசனத்தை எப்போதோ மாற்றியிருப்பார்கள். – முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ‘இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணம்’ எனும் பெயரில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் இருந்து 3 நாட்கள் நடைபயணமாக 75 […]
அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் என்றும் அடிபணியாது. – சோனியா காந்தியை அமலாக்க துறை விசாரணை செய்வதை எதிர்த்து பா.சிதம்பரம் கருத்து. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பு விசாரணையில் இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பா.சிதம்பரமும் இந்த […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஆர்எஸ் பாரதி,டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார்,நவநீதகிருஷ்ணன்,எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும்,இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறையும் என்றும்,அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். அந்த வகையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேசமயம்,அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தின் வீடு,அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2010 முதல் 2014 வரை சீனர்கள் இந்தியா வர சட்ட விரோதமாக சுமார் 250 விசாக்கள் வாங்கி பெற்று தர ரூ.50 […]
காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,டெல்லி,மும்பை சென்னை மற்றும் தமிழகத்தில் சிவகங்கை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக,அவரது மகன் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பான நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களுக்கு இடையே வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பாக,முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது […]
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்தை அடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களில் செயல் திறன் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் […]
விவாதமின்றி விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் பிரதமர் மோடியை சாடியுள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் விவாதங்களின்றி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யும் பொழுது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் […]
மத்திய அரசின் பேராசையால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்கப்பட்டது என பா.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்கு மத்திய அரசிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமாகிய பா.சிதம்பரம் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தான் […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் […]
நேரு புகைப்படம் இன்றி சுதந்திர தின போஸ்டர் வெளியிட்டதற்கு வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரித்துள்ளார். இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை குறிக்கும் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரை இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த பேனரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ்,பகத் சிங், விநாயக் தாமோதர் சாவர்க்கர் ,நரசிம்மராவ் உள்ளிட்டோரின் படங்கள் உள்ளன, ஆனால் அதில் மறைந்த […]