முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார்..!

N. Nanmaran, a two-time MLA in Madurai, has passed away.

மதுரையில் இரண்டுமுறை எம் எல் ஏ.வாக இருந்த என்.நன்மாறன்  காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம் எல் ஏ.வான என்.நன்மாறன்மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். தமுஎகச வில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.