அமித்ஷா கூறுவது தவறு.! புல்வாமா தாக்குதல் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் முன்னாள் ஆளுநர்.!

ஆளுநர் பதவியில் இருக்கும் போதே புல்வாமா தாக்குதல் பற்றி நான் கேள்வி எழுப்பிவிட்டேன் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

ஆளுநர் பதவியில் இருக்கும் போதே புல்வாமா தாக்குதல் பற்றி நான் கேள்வி எழுப்பிவிட்டேன் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வாகனங்களில் சென்று கொண்டிருந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் மத்திய உள்துறை மீதும் , பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களை முன்வைத்தார்.

unknown node

இந்த தாக்குதலில், உளவுத்துறை தோல்வியடைந்ததாகவும், பாதுகாப்பு வீரர்கள் செல்வதற்கு விமானம் தர உள்துறை மறுத்துவிட்டதாகவும் அதனால் தான் தரைவழி பயணத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாகவும் சமீபத்தில் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடியிடம் இதனை பற்றி கூறும்போதும், இதனை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என அமைதியாக இருக்க கூறினார் எனவும் மாலிக் ஒரு தனியார் செய்தி நிறுவன பேட்டியில் குற்றம் சாட்டினார்.

unknown node

[File Image]இந்த குற்றசாட்டுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில்,  ‘ பாஜக மூடிமறைக்க வேண்டிய எதையும் செய்யவில்லை. அதனை எங்களால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். எங்களை (பாஜக) விட்டு பிரிந்த பிறகு யாராவது (சத்யபால் மாலிக்) குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அதை ஊடகங்களும் மக்களும்  கண்டுகொள்ள கூடாது.என குறிப்பிட்டு இருந்தார்.

unknown node

[File Image]அமித்ஷாவின் கருத்துக்கள் குறித்து பதிலளிக்கும் வகையில் ராஜஸ்தானில் பேசிய சத்யபால் மாலிக், நான் ஆளுநர் பதவியில் இருக்கும் போதே, அந்த தாக்குதல் நடந்த சமயத்திலேயே அந்த கேள்விகளை எழுப்பிவிட்டேன். என கூறினார். மேலும், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் பற்றி மாலிக் கூறுகையில், பாஜக வெற்றி பெற வாழ்த்துகிறேன், ஆனால் அரசியலிலும் தேர்தல்களிலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தற்போதைய சூழ்நிலை அவர்களுக்கு (பாஜக) கடினமாக உள்ளது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே போல, புல்வாமா விவகாரம் குறித்தும் பிரதமர் பேச வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

அமித்ஷா கூறுவது தவறு.! புல்வாமா தாக்குதல் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் முன்னாள் ஆளுநர்.!