#BREAKING: முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி தற்கொலை..!

Soundarya, granddaughter of former Karnataka Chief Minister BS yediyurappa, committed suicide by hanging herself today. He is 30 years old.

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா இன்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா உடல்  சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா..? அல்லது வேறு காரணமா..? என்பது இன்னும் தெரியவில்லை. தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும் அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சௌந்தர்யாவுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. சௌந்தர்யா உடல் பௌரிங்  அண்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. போலீசார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.