முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக அறிவித்த கர்நாடக சட்டப் பேரவை..!

Former Chief Minister Yediyurappa has been declared the best member of the Legislative Assembly by the Karnataka Legislative Assembly ..!

கர்நாடக சட்டப் பேரவை,முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக இன்று அறிவித்துள்ளது.

மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதைப் போல, இந்த ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான “சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதை” கர்நாடகா பெறும் என்று கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே ககேரி கூறினார்.

இந்நிலையில்,கர்நாடக சட்டப் பேரவை முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை, 2020-21 ஆம் ஆண்டின் “சிறந்த சட்டமன்ற உறுப்பினராக” அறிவித்துள்ளது.இதனையடுத்து,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

unknown node