முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக்காவல்..!

— Mehbooba Mufti (@MehboobaMufti) September 29, 2021

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

புல்வாமாவின் ட்ராலில் ஒரு குடும்பத்தை இராணுவத்தினர் தாக்கியதாகவும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்,  முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நாளை சந்திப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எதுகுறித்து தனது ட்விட்டரில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ட்ராலில் உள்ள கிராமத்திற்குச் செல்ல முயன்றபோது இன்று மீண்டும் என் வீட்டில் அடைத்து வைக்கபப்ட்டதாக தெரிவித்துள்ளார்.