முதல்முறையாக நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக..!

For the first time, the DMK has taken over the chairmanship of the Nemili Union Committee.

முதல் முறையாக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலான கடந்த அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்று,பின்னர் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,கடந்த 22 ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி ,ஊராட்சி ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து,இதில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில்,கடந்த 22 ஆம் தேதி நடைபெறவிருந்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் அதிகாரிகள் செய்த சிறிய குளறுபடிகள் காரணமாக அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தள்ளிவைக்கப்பட்ட நிலையில்,இன்று மறைமுக தேர்தல் போலீசார் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.இதுவரை அதிமுக மட்டுமே நெமிலி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று வந்த நிலையில்,தற்போது முதல் முறையாக திமுக வென்றுள்ளது.

திமுகவை சேர்ந்த வடிவேலு நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.