அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : கரூர் பேருந்து நிலையம்.. பாஜக அலுவலகம் பகுதிகளில் போலீசார் குவிப்பு.!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை தொடர்ந்து கரூர் பகுதிகளில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

TN Police

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை தொடர்ந்து கரூர் பகுதிகளில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.

அதன்பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கைது நடவடிக்கையை தொடர்ந்து அவரது சொந்த ஊரான கரூர் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கரூர் பேருந்து நிலையம், கரூர் பாஜக அலுவலகம் என காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : கரூர் பேருந்து நிலையம்.. பாஜக அலுவலகம் பகுதிகளில் போலீசார் குவிப்பு.!