நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் – உத்தவ் தாக்கரே

Five lakh each for families of landslide victims - Uttam Thackeray

மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து  முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

முன்னதாக,இதுபற்றி  உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில்,மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுமார் 35 பேர் உயிர் இழந்துள்ளதாக தாக்கரே தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில் இருந்து பெய்த கனமழையால் ராய்காட், ரத்னகிரி, பால்கர், தானே, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, தாக்கரே தெற்கு மும்பையில் உள்ள மந்திராலயாவில் (மாநில செயலகம்) உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலைமையைப் பற்றி கேட்டறிந்தார்.