அரசியலில் அடுத்த நகர்வு என்ன ? மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை

Expelled DMK leader MK Alagiri to hold consultations with his supporters in Madurai,during assembly election

மதுரையில் மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி வருகிறார் மு.க.அழகிரி.மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள  ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்க ஏற்கனவே அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில்,அழகிரிவீட்டில் இருந்து மண்டபம் வரை வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்கள் பதாகைகளில் கருணாநிதி,மு.க.அழகிரி, துரை தயாநிதியின் படங்கள்இடம்பெற்றுள்ளன.

அவர் அரசியல் குறித்து என்ன முடிவு எடுக்க உள்ளார் என்று தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.ஆலோசனையில் இன்று புதிய கட்சியை தொடங்குவது அல்லது திமுகவுடன் இணைவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை முடிந்த பின்னர் அழகிரி செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.