34 ஆண்டுகளுக்கு பின்னர் எம்எல்ஏ-வாக இவிகேஎஸ்.இளங்கோவன்.! இன்று பதவியேற்பு.!

34 ஆண்டுகளுக்கு பின்னர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவிகேஎஸ் இளங்கோவன் இன்று பதவி பிரமாணம் மேற்கொள்கிறார்.

34 ஆண்டுகளுக்கு பின்னர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவிகேஎஸ் இளங்கோவன் இன்று பதவி பிரமாணம் மேற்கொள்கிறார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சுமா 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தற்போது 34 ஆண்டுகள் கழித்து இளங்கோவன் சட்டமன்றத்தில் எம்எல்ஏ-வாக நுழைய உள்ளார். இன்று அவருக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.

புதிய சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 1984 முதல் 1989 வரையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.