எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் – ஓபிஎஸ்

எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட்.

எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட்.

இன்று அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,எம்ஜிஆர் நினைவு இல்லத்தில்அதிமுக கொடியேற்றி வெள்ளை புறாக்களை பறக்க விட்டார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஇஅதிமுக இயக்கத்தின் 51-ஆம் ஆண்டு விழாவான இன்று, கழகத் தொண்டர்கள் அனைவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்து தந்த கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் அடி பிறழாது கடைபிடித்து, கழகத்திற்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்பட்டு,”எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும்” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்வாக்கினை நிறைவேற்றவும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் ஒற்றுமையோடு மக்கள் பணி ஆற்றுவோம் என உறுதியேற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node