ஈழத் தமிழர்களுக்கு சமகுடியுரிமை,அரசியல் உரிமைகள் உறுதி – ஆளுநர் ..!

Ensuring equality and political rights for Eelam Tamils - Governor

16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார்.

அந்த உரையில்,”ஈழத் தமிழர்களுக்கு சமகுடியுரிமை,அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும்” என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.