ஆளுநர் மாற்றம்? – பீட்டர் அல்போன்ஸ் கருத்து!

தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறாரா? அவ்வாறு நடந்தால் மத்திய அரசு எப்படி கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தற்போது முதன் முதலாக தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 … Read more

ஈழத் தமிழர்களுக்கு சமகுடியுரிமை,அரசியல் உரிமைகள் உறுதி – ஆளுநர் ..!

16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார். அந்த உரையில்,”ஈழத் தமிழர்களுக்கு சமகுடியுரிமை,அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு … Read more

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து  தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.இதற்காக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்,பொங்கல் திருநாள் அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சி, செழிப்பை அள்ளித்தர வாழ்த்துகிறேன். கொண்டாட்டம், சமத்துவம், சகோரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பொங்கல் திருநாள்  அமையட்டும். நாம் பெற்ற அளவற்ற … Read more

புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்ககுங்கள் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரியலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை அனைவரும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அறிய புத்தக திருவிழாக்களை அனைவரும் பயானுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஹெச்.ராஜாவை சந்தித்த  ஆளுநர்..!ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி  புகார் ..!

ஹெச்.ராஜாவை சந்தித்த  ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி  காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார். இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது … Read more

தொழில் முனைய உதவிக்கு என்னை அணுகலாம்-ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தொழில் முனைவோருக்காக ஆளுநர் மாளிகையின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் தொழில் தொடங்க எத்தைகைய உதவி தேவைப்பட்டாலும் தம்மை அணுகுமாரும் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ஜெயின் சமையத்தை பின்பற்றுவோர்கள் வைத்துள்ள ஜெயின் சர்வதேச வர்த்தக என்கிற அமைப்பின் தொழில் முனைவோருக்கான வர்த்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். அப்போது ஆளுநர் பேசுகையில், “ஜெயின் சமூகத்தினர் தமிழகத்தில் பெரும்பாலான எண்ணிக்கையில் இருப்பதால் தமிழ்பேச … Read more