ஒரு பெண் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இன்று உலகம் முழுக்க மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்களின் எண்ணம் :இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பெண்களை அடிமையாக வைக்க நினைக்கும் ஆண்களின் எண்ணம் மாற வேண்டும் என குறிப்பிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா :அவர் மேலும் பேசுகையில், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா. ஒரு பெண் முதல்வர் எப்படி ஆள வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என காட்டியவர் ஜெயலலிதா என கூறினார்.
எம்ஜிஆர் பாடல் :மேலும், தாயில்லைமல் நானில்லை. தானே எவரும் பிறந்ததில்லை என எம்ஜிஆர் பாடியது போல, ஒரு தாய் போல இருந்து கழகத்தை வழிநடத்தி தொண்டர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என கூறி, நம்மை ஈன்ற தாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம் எனவும் எடப்பாடி பழனிசாமி அந்த விழாவில் பேசினார்.